Total Pageviews

Wednesday, 17 July 2013

பாரதியின் பாட்டு!

கொல்கத்தா நகரத்தை தொட்டு ஓடும் ஹூக்லி என்ற கங்கை நதியின் அக்கரையில் உள்ள நகரம்தான் ஹஊரா. ஆங்கிலையர்கள் காலத்திலிருந்தே, பத்தாம் வகுப்பு முடித்தப்பின், shorthand தட்டச்சு கற்றுக்கொண்டு வேலை வாய்ப்பு தேடி வரும் தமிழர்களை கண்டு காற்ற ஊருதான் ஹௌரா.ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டு, இரவு பள்ளியில் மேல்படிப்பு படித்துவிட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டப்பின் அக்கரையில் உள்ள கொல்கத்தா நகரத்திற்கு மாரி செல்ல நம் முன்னோர்களுக்கு ஒரு கட்டுப்பாடு. இது வரலாறு. நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் சில வருடங்கள் இந்த ஹௌரா நகரத்தில்தான் வசித்து வந்தேன்.அந்த நாட்களில் ஹௌராவில் சுமார் முன்னூறுக்கும் மேல் தமிழர் குடும்பங்கள் வசித்து வந்திருந்தார்கள். வயிற்றுபசியை போக்க, நாடு விட்டு நாடு வந்த தமிழ்யர்களுக்கு, ஹௌராவில் திருவள்ளுவர் கலை மன்றம் மற்றும் தென் இந்தியர் சங்கம் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தாய்மொழியின் பசியை தீர்க்க தொடங்கிய இரண்டு அமைப்புகள். இந்த இரண்டு சங்கங்களும், இவ்வூரில் வாழ்யும் தமிழர்களின் தமிழ்நாடு உடன் தொடர்பு விட்டுபோகாமல் இருக்கும் முயற்சியில் ஈடு பட்டு வந்தார்கள். தமிழ் நூலகம், தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆரம்ப பள்ளி நடத்தி வந்தார்கள், இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதன்போலவே திருக்குறள், திருப்பாவை, திருவெம்பாவை,கர்நாடிக் சங்கீதம், நாமசங்கீர்த்தனம், கோலம் போன்ற போட்டிகளும் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது அனைதுக்கும்மேல் எனக்கு மிக பிரியமான நிகழ்ச்சி, வருடா வருடம் கலை மன்றம் நடத்திவரும் பாரதி விழா தான். இந்த விழாவில் மகாகவியின் நூல்கள், சிந்தனைகள், பாடல்களை அடிபடியாக வைத்து நடக்கும் பட்டி மன்றம், பேச்சு போட்டி, பாட்டு போட்டி அமோகமாக இருக்கும். இங்கு ஒரு உண்மை. தமிழ் படிக்கதெரியாத நான்,பாரதியின் நூல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் சைய்யபட்ட புத்தகங்களில் படித்துள்ளேன். ஆகையால் என்னை பொருத்தமட்டில் நான் ஒரு பாரதி பக்தன்.தீவிரமான பாரதி விசிரி, ஏன் வெறியன்னு கூட சொல்லலாம்.  

இம்மாதிரியான் வெறியில் இருக்கும் நிலமையில் ஒரு முறை நானும் பாரதி விழாவில் பாட்டு போட்டியில் பாட வேண்டும் என்று தீர்மானித்தேன். பாடலை சொதப்பிடுவேனோ என்ற சந்தேகம், தயக்கம்பயம் கலந்திருந்த சூழ்நிலையில் " எதுக்கும் நம் நண்பர்களிடம் அபிப்ராயம் கேட்டு பாக்கலாம்" என்று நினைத்தேன், அவர்களிடம் கேட்டேன். ஒருவன் "ஹாஹாஹாஹாஹாஹா, மச்சி ஜோக்கடிக்காதே" என்றான். "ஒனக்கு செரியா தமிழ் பேசவே வராது, இதுல  பாட்டு ஒன்னு கோரையா?" என்று கேட்டான் இன்னொருவன். "வேணா டி. ஏன் ஒனக்கு வீண் வம்பு? வாங்கி கட்டிக்காதே" என்று எச்சரித்தான் மற்றொருவன். சும்மா இருந்த மாட்டை கிள்ளி பார்த்த கதை மாதிரி ஏன் டா இவங்களை கேட்டோம்னு ஆகிவிட்டது. பலதடவை யோசித்தேன்.  "பயம் ஏன்?" என்றது மனம். "இப்படி ஒரு சோதனை தேவையா?" என்று கேட்டது அறிவு. கடைசியில் பூவா - தலையா போட்டு பார்த்துவிட்டு போட்டியில் கலர்ந்துகொள்ள பெயரை கொடுத்துவிட்டேன்.

போட்டியின் நாள் கிட்ட வர வர, காலை, மாலை, நேரம் காலம் கிடையாமல் வாயை தொரந்தால்வாயை மூடினால் ஒரே பாரதிமயம்.சுர்யோதயமில் இருந்து படுக்கும் நேரம் வரை பாரதி படிய பாட்டின் பயிற்சிதான். சாப்பிடும் நேரம், படிக்கும் வேளை, கடை வீதியில், கல்லூரியில் ஏன் குளிக்கும் அறையில் கூட பாரதி தான். நான் பாரதியின் பாட்டை படித்த அளவுக்கு பரிச்சைக்கு கூட படித்ததில்லை. பாரதியே என் பேச்சு, பாரதியே என் மூச்சு, பாரதியே என் ஜோலியாகிவிட்டது. திடிரென போட்டியின் நாள், போட்டியின் நேரம் வந்துவிட்டது.

செரியன நேரத்தில் போட்டி நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தேன்நுழையும்போதே அசதியில் புளி கரைக்க ஆரம்பித்தது. "தைரியமா இருடா" என்று நானே எனக்கு ஊக்கம் அளித்துக்கொண்டு மேடை அருகில் ஒரு நாற்ககலியில் அமர்ந்தேன். பாட்டு போட்டிக்குமுன் பேச்சு போட்டி நடக்க இருந்தது, நடந்தது. அனால் என்ன நடந்தது, எப்போ முடிந்தது என்று எனக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை.ஸ்லோகங்கள் சொல்வதுப்போல் என் தியானம் எல்லாம் பாரதியின் பாட்டின்மேல் தான். பாட்டின் நடுவில் சற்று நிமிர்ந்து பார்த்தேன். என்னை சுற்றி என் நண்பர்கள் எல்லோரும் ஒரு கூட்டமாய் ஒட்காந்திருந்தார்கள். " மச்சி, தூள் கேளப்பிடு" என்றான் ஒருவன். "கமான் பிரதர், இன்னிக்கி பாரதியார உண்டு இல்லைன்னு ஆக்கிடு" என்றான் மற்றொருவன்."சூபெர் டி, இன்னிக்கி உன் பாட்டதான் கேட்க வந்திருகோம்" என்று கூறினான் இன்னொருவன். அடிஷனல் பிரஷர்! தலை குனிந்து மறுபடியும் பாரதியின் திசையில் கவனத்தை திருப்பினேன். திடிரென மைக்கில் " அடுத்தபடியாக பாடுபவர் திரு ஆனந்த் அவர்கள்" என அன்னௌன்செமென்ட். "யாரோ ஆனந்தாம்" என்று விட்டுவிட்டேன். அப்பொழுதுதான் என் நண்பர்கள் எல்லோரும் ஒரே குரலில் " டேய்! படுபாவி, நீதாண்டா! போ! கெளம்பு!" என்று கத்தினார்கள். அவர்கள் கத்தியப்பிந்தன் எனக்கே ஒரைச்சுது. "அடப்பாவி, அதுக்குலேயே நம்பள கூப்டாங்களா?"  என்று அடிச்சு புடிச்சு தட்டு தடுமாரி விழுந்து உருண்டு ஒரு வழியாய் மேடைக்கு பொய் சேர்த்தேன்.

மேடையில் நின்று பார்தப்பிந்தான் தெரிந்தது, அங்கு சுமார் ஐநூறுக்கும்மேல் மக்கள் உள்ளனர் என்று. Housefull ! "ஜமாஇசுடு குரு! வெளுத்துக்கட்டு!" என்று நண்பர்கள் எல்லோரும் அரசியல் மாநாட்டில் தொண்டர்கள் பாணியில்  ஒரே ஆர்பாட்டம். நடுவில் CSK பட்டாலம்போல் விசில் வேற. கூட்டத்தை பார்த்தவுடன் கைகள் நடுங்க ஆரமிதன. கைகளை பாக்கேட்க்குள் நுழைத்தேன், கால்களும் நடுங்கரமிதது. வேடனை பார்த்த பரவைகலைபோல் பாரதி என்னை அம்போன்னு விட்டு மறைந்தார். இதயம் இசைஞானியின் மிருதங்கம்போல் இடிக்க ஆரமித்தது. நாக்கு கழுதுசுருக்கைபோல் சுற்றிக்கொண்டது, வாயோ அத்திப்பட்டி கிராமம்போல் காய்ந்துவிட்டது, கண்ணெல்லாம் ஒரே இருட்டு. பாட முயற்சி செய்தால் வெரும் காத்துதேன் வந்தது. ஐந்து நிமிடங்களுக்கு மைக்கின் முன்னால் பேந்த பேந்த முழுசிட்டு மேடையை விட்டு இறங்கினேன். அவமானம்! அவமானம்!

"பின்னிட்டே மச்சான்" "தூள் டக்கர்" "சூபர் டி ராசா" " டேய் நீ பாடவந்தியா
இல்ல நடிக்கவந்தியா?" "விடுங்க பாஸ், இந்த முறை மைக்கு வரை போனீங்க, அடுத்த முறை பாடவும் செய்வீங்க". ஆம், இதுதான் என் முயற்சிக்கு வந்த விமர்சனம். நக்கல், நய்யாண்டி, அனுதாபம், பரிதாபம் கலர்ந்த ஆயிரம் கண்கள் என்மேல் பாய்ந்தன. "இதுக்கு மேலேயும் இங்க இருந்தா கேவலம், எஸ்கேப் டா வெளக்கென்ன" என்று என்னை நானே திட்டிக்கொண்டு இடத்தை விட்டு ஓடினேன். வெட்கத்தில் விழிந்த நான்என் கால்கள் எங்கு கொண்டு போனதோ அங்கேயே நானும் சென்றேன்மயக்கமும், சிந்தனையும் கலைந்த அந்த ஒரு நொடியில் பார்த்தால், என் கால்கள் என்னை கங்கைக்கரைக்கு கொண்டு வந்திருந்தது. "இவ்வவளவு கேவலம் பட்டப்பின் வாழ்வதே வேஸ்ட், இப்படி வாழுவதற்கு சாகுவதே மேல்" என்று தீர்மானித்தேன். கங்கையில் ஒரு தாவு தாவினேன். சட என்று தூக்கம் கலைந்தது!என் கணவில் நான் பாடிய மகாகவி பாரதியின் பாடல் இதோ --à
http://www.raaga.com/play/?id=263640
------------------------------------------------------------------------------------------
பி.கு: உதவிக்கி நன்றி @ImSarath7, @VETTIAAN மற்றும் @OviyaBalan

2 comments:

  1. I don't accept your claim of not knowing to read or write Tamil. your style of writing, brings back memories of those sirukadhai I used to read in AnandaVikatan of yore ( not the present day crap). Well done. Keep doing well.

    ReplyDelete
  2. I dont claim I dont know Tamil, my only claim is i dont know to read and write Tamil. I write in english script and use a converter application, pretty poorly at that I am told;). And if you find them interesting like a Sirukadhai which it is, I am happy. Are they like the ones in Ananda Vikatan of yore? I wouldnt know as I have never read them and that is because I cant. My knowing Tamil is restricted to speaking my Mother tongue which it is. Thank you.

    ReplyDelete