Total Pageviews

Wednesday, 17 July 2013

முதல் முயற்சி!

ஒரு பொருள் நம்மை பிரிந்தப்பிந்தான் அதன் மதிப்பு நமக்கு புரியும் என்பது பழமொழி. அதன்ப்போலவே நமக்கு கிடைக்காத போருல்மேல்தான் நமக்கு ஆர்வம் அதிகமாய் இருக்கும என்பது இன்னொரு பழமொழி. என்னை பொருத்தமட்டில் மேல் வரிசைகளில் கூறிய இரண்டு மொழியும் என் விஷயத்தில் நூறு சதவீதம் போருந்தினதாகும். என் வாழ்க்கையின் மிகப்பெரிய குறை என்னவென்றால், எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாததுதான். வட இந்தியாவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து படிப்பறிவு பெற்ற தமிழன் நான். இச்சுழ்நிலையில் உலகமொழி ஆங்கிலமும், ராஷ்டிரா பாஷா என்கிற தேசிய மொழியான ஹிந்தியும் படிக்க ஒரு வாய்ப்பும் ஒரு கட்டாயமும் ஏற்பட்டது. தாய்மொழி தமிழை பொறுத்தவரை நான் பசிஎடுதும் பால் கிடைக்காத ஒரு குழந்தை, தாயில்லா அனாதைப்போல் வளர்ந்து வந்தேன். பாலைவனத்தில் நீரில்ல ஒரு அப்பாவி நான் என்றும் சொல்லலாம். ஆகையால் தமிழ்மண்மீதும், தமிழ்மொழிமீதும், தமிழ் காவியங்கல்மீதும், தமிழ் பாடங்கல்மீதும், தமிழ் திரைப்படங்கல்மீடும் ( அத மறக்க முடியுமா?) எனக்கு ஒரு அளக்க முடியாத அன்பு,பாசம்,பற்று. அதனால்தான் இக்கட்டுரையின் முதல் வரிகளிலே பழமொழி மழை. பல வருடங்கள் வட இந்தியாவில் வாழ்ந்துவிட்டு, உத்தியோகத்திற்கு போகும் வயதில் நாடு திரும்பிய எனக்கு, தமிழ் கட்ட்ருக்கொள்ள ஆர்வம் இருந்தப்பின்னும், நேரத்தின் நெருக்கடியால் நான் இன்னும் இம்மொழியில் புலமை இல்லாத ஒருவன் தான்.

சில மாதங்களுக்குமுன் நான் முதல் முறையாக ஆங்கிலத்தில் ப்ளொக்ஸ் எழுத துணிந்தேன். கடந்த சில மாதங்களாய் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றேன். எழுத துணிந்த எனக்கு மனதில் ஒரு சின்ன வருத்தம். தமிழனாய் பொறந்து, தமிழனாய் வளர்ந்து, தமிழ்நாட்டில் வசிக்கும் நான் தமிழில் எழுத தெறியாத ஆசாமியா இருக்கேனே என்று. ஆங்கிலத்தில் எழுதுவதிலும் நான் பெரிய கொம்பன் ஒன்றும் இல்லை ஆனாலும் தமிழ் மொழியின் ருசியும், ரசனையும் வேறெங்கும் உண்டோ? என் ஆங்கில கட்டுரைகளை படித்த சில நண்பர்கள் அதை தாறு மாறாக விமர்சித்து என்னை அக்குவேர் ஆணிவேராக பிரித்து வைத்தார்கள். கோபமும் நையாண்டியும் கலர்ந்த வார்த்தைகளால் கலாஐதார்கல். அனால் நான் கவலை படவில்லை. பரவாஇல்லை என்று மன்னித்துவிட்டேன். ஏனனில் எழுத்தாளர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா, இல்லையா? அத்தோட விட்டார்களா? இல்லை. த்விட்டேரில் சில மதிப்புக்குரிய போல்லோவேர்கள், எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று தெரிந்து வைத்துக்கொன்று "ஆங்கிலத்தில் ப்ளொக்ஸ் எழ்துபவர்கள் பலர் உள்ளார்கள், நீங்கள் என் ஆங்கிலத்தை விட்டுவிட்டு தமிழில் எழுத கூடாது?" என்று கெட்டு என்னிடமிருது தப்பிக்க முயற்சி செய்தார்கள். ஆனா என்னிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களை மறந்துவிட்டார்கள். முதல் விஷயம் என்னவென்றால் எழுத படிக்க தெரியாத எனக்கு தமிழ் பேச தெரியும் அல்லவா? தமிழ் வார்த்தைகளை, ஆங்கில எழுதில் தட்டச்சு செய்தப்பின் அவைகளை சாப்ட்வேர் மூலமாக, தமிழ் எழுத்தாய் மாற்ற முடியும் என்பது அவர்களுக்கு தோன்றவில்லை என்று நினைக்கிறேன். இல்லை, "இப்படி ஒரு வழி இருக்கு, ஆனா இந்த வேலக்கேனைக்கு எங்க இதெல்லாம் டேரியபூவுது!" என்று நினைத்திருப்பார்கள். உண்மையை சொல்லவேண்டும் என்றல் இப்படி ஒரு சாப்ட்வேர் application நை தான் நானும் பல நாட்களாய் தெடிக்கிடு இருந்தென். அவர்கள் காண்பித்த நக்கலும் நய்யண்டியும் குடுத்த உக்கம் தான் என்னை இதை ஒரு வெறியுடன் தேட வைத்தது.

அவர்கள் மறந்த இரண்டாம் விஷயம் என்னவென்றால், நான் ஒரு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாத ஆளு,உப்பு போட்டு சோறு திங்காத ஜன்மம். ஆங்கிலத்தில் இவ்வளவு வாங்கி கட்டிடிண்டபின்னும் மாறாத, அலுத்துக்காத, கவலை, கோவம், வருத்தம் படாத, எருமைமாட்டு முதுகுல  மழை பெஞ்சா மாதிரி கம்முன்னு இருக்கும் எனக்கு தமிழ்ல வாங்கிகட்டிக்க கசக்குமா என்ன? இல்லை இந்த வாய்ப்பைத்தான் நான் விட்டுடுவேனா?

என்னை கலாய்ச்சு, என்னிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமா இருக்கும்னு நம்புகிறேன். அதுவும் வீணா தமிழ மொழிய வெச்சு கிண்டல் பண்ணவங்களுக்கு விமோசனமே கிடையாது. ஆங்கிலத்தில் நான் அர-கோரையா எழுதினதை படிச்சுட்டு தேமேன்னு இருக்காமல் என்ன தமிழ்ல எழுதச் சொல்லி விளையாட்டு பாக்கலாம்னு கெளம்பின கும்பல் வசமா மாட்டிகிட்டாங்க. இனி ஆங்கிலம் மட்டும் இல்லை, தமிழ்ளேயும் எழுதி அவங்களை படுத்தி எடுப்பேன் என்று தாய் (மொழி)மேல் ஆணை. இப்போ என்ன செய்வீங்கோ? இப்போ என்ன செய்வீங்கோ?

இனிமேலாவது அடங்கி ஒடங்கி மடங்கின நெய் ரோஸ்ட் மாதிரி இருங்க. இதையும் மீறி பெங்காலி, புஞ்சபி, ஹிந்தின்னு அரமிசீன்களோ, எனக்கு இந்த மொழிகளும் பேச தெரியும், இந்த மொழிகளிலும் இதே சாப்ட்வேர் application வேலை செய்யும். ஜாக்ரதை!


----------------------------------------------------------------------------------------------------------


பி.கு.:தமிழில் என் முதல் முயற்சி. ஆசிர்வதிப்பீர் என்று நம்புகிறேன், ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

No comments:

Post a Comment